Saturday, June 13, 2009

தியாகராஜ கிருதி - நினு வினா நா மதி3 - ராகம் நவ ரஸ கன்னட3 - Ninu Vina Na Madi - Raga Nava Rasa Kannada

பல்லவி
நினு வினா நா 1மதி3யெந்து3 நிலுவதே3 ஸ்ரீ ஹரி ஹரி

அனுபல்லவி
கனுலகு நீ ஸொக3ஸெந்தோ க்ரம்மியுன்னதி33னுக (நினு)

சரணம்
சரணம் 1
நீது3 கத2லு வீனுலந்து3 நிண்டி3யுன்னதி3 ராம
ஸ்ரீ-த3 நீ நாமமு நோட செலகி3யுன்னதி33னுக (நினு)


சரணம் 2
நேனுயெசட ஜூசினனு நீவையுன்னதி3 ராம
பா4னு வம்ஸ1 திலக நீது34க்துட3னுசு பேரு க3னுக (நினு)


சரணம் 3
கபடமௌ மாடலெல்ல கம்மனைனதி3 ராம நா
தபமு யோக32லமு நீவே த்யாக3ராஜ ஸன்னுத (நினு)


பொருள் - சுருக்கம்
அரி! இராமா! சீரரூள்வோனே! பரிதி குலத்திலகமே! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!

  • உன்னையன்றி எனதுள்ளமெங்கும் நிலையாதே;


    • கண்களுக்குனது எழில் மிக்கு இனிமையாகவுள்ளது;

    • உனது கதைகள் செவிகளில் நிறைந்துள்ளன;

    • உனது பெயர் நாவினில் திகழ்ந்துள்ளது;

    • நானெங்கு நோக்கினும் நீயாகியுள்ளது;

    • உனது தொண்டனெனப் பெயர்;

  • எனவே, உன்னையன்றி எனதுள்ளமெங்கும் நிலையாதே;


  • (உனது) வஞ்சகமான சொற்களெல்லாம் இனிவையைகின;

  • எனது தவமும், யோகத்தின் பயனும் நீயே.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நினு/ வினா/ நா/ மதி3/-எந்து3/ நிலுவதே3/ ஸ்ரீ ஹரி/ ஹரி/
உன்னை/ அன்றி/ எனது/ உள்ளம்/ எங்கும்/ நிலையாதே/ ஸ்ரீ ஹரி/ ஹரி/


அனுபல்லவி
கனுலகு/ நீ/ ஸொக3ஸு/-எந்தோ/ க்ரம்மி/-உன்னதி3/ க3னுக/ (நினு)
கண்களுக்கு/ உனது/ எழில்/ மிக்கு/ இனிமையாக/ உள்ளது/ எனவே/ உன்னையன்றி...


சரணம்
சரணம் 1
நீது3/ கத2லு/ வீனுலு-அந்து3/ நிண்டி3/-உன்னதி3/ ராம/
உனது/ கதைகள்/ செவிகளில்/ நிறைந்து/ உள்ளன/ இராமா/

ஸ்ரீ/-த3/ நீ/ நாமமு/ நோட/ செலகி3/-உன்னதி3/ க3னுக/ (நினு)
சீர்/ அரூள்வோனே/ உனது/ பெயர்/ நாவினில்/ திகழ்ந்து/ உள்ளது/ எனவே/ உன்னையன்றி...


சரணம் 2
நேனு/-எசட/ ஜூசினனு/ நீவை/-உன்னதி3/ ராம/
நான்/ எங்கு/ நோக்கினும்/ நீயாகி/ உள்ளது/ இராமா/

பா4னு/ வம்ஸ1/ திலக/ நீது3/ ப4க்துடு3/-அனுசு/ பேரு/ க3னுக/ (நினு)
பரிதி/ குல/ திலகமே/ உனது/ தொண்டன்/ என/ பெயர்/ எனவே/ உன்னையன்றி...


சரணம் 3
கபடமௌ/ மாடலு/-எல்ல/ கம்மனி/-ஐனதி3/ ராம/ நா/
வஞ்சகமான/ சொற்கள்/ எல்லாம்/ இனிவையை/ ஆகின/ இராமா/ எனது/

தபமு/ யோக3/ ப2லமு/ நீவே/ த்யாக3ராஜ/ ஸன்னுத/ (நினு)
தவமும்/ யோகத்தின்/ பயனும்/ நீயே/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - மதி3யெந்து3 - மதெ3ந்து3 : 'மதி3' + 'எந்து3' என்பதனை 'மதெ3ந்து3' என்று சேர்க்கலாகாது - 'மதி3யெந்து3' என்றுதான் சேர்க்கவியலும். எனவே 'மதெ3ந்து3' தவறாகும்.

மேற்கோள்கள்

விளக்கம்
வஞ்சகமான சொற்கள் - முன்னம், இறைவன் பகன்ற, வஞ்சகமாகத் தோன்றிய, சொற்கள்

Top


Updated on 13 Jun 2009

No comments: