Wednesday, April 22, 2009

தியாகராஜ கிருதி - ஸ்ரீ ஜானகீ மனோஹர - ராகம் ஈஸ1 மனோஹரி - SrI Janaki Manohara - Raga Isa Manohari

பல்லவி
ஸ்ரீ ஜானகீ மனோஹர ஸ்ரீ ராக4வ ஹரி

அனுபல்லவி
நா ஜாலினி நீவே தெலிஸி
1நம்ரானனுடௌ3டகேமி காரணமு (ஸ்ரீ)

சரணம்
நே ஸேயு து3ஷ்கர்ம தே3வத
நீ ஸன்னிதி4னி நில்வ ஸாகெ3னோ
நீ ஸேவ 2நில்வக3னேலரா
நீரஜாக்ஷ த்யாக3ராஜ ஸன்னுத (ஸ்ரீ)


பொருள் - சுருக்கம்
சானகியின் மனம் கவர்ந்த இராகவா! அரியே! கமலக்கண்ணா! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
  • எனது துயரினை நீயேயறிந்தும் தலைகுனிந்திருக்கக் காரணமென்னவோ?

  • நான் செய்யும் தீய செயல்களெனும் தேவதை உனது சன்னிதானத்தினில் நிற்க முடிந்ததோ?

  • உனது சேவைகள் நிற்பதேனய்யா?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸ்ரீ ஜானகீ/ மனோஹர/ ஸ்ரீ ராக4வ/ ஹரி/
ஸ்ரீ ஜானகியின்/ மனம் கவர்ந்த/ ஸ்ரீ ராகவா/ அரியே/


அனுபல்லவி
நா/ ஜாலினி/ நீவே/ தெலிஸி/
எனது/ துயரினை/ நீயே/ யறிந்தும்/

நம்ர/-ஆனனுடு3/-ஔடகு/-ஏமி/ காரணமு/ (ஸ்ரீ)
குனிந்த/ வதனத்தவனாக/ ஆவதற்கு/ என்ன/ காரணம்/


சரணம்
நே/ ஸேயு/ து3ஷ்/-கர்ம/ தே3வத/
நான்/ செய்யும்/ தீய/ செயல்களெனும்/ தேவதை/

நீ/ ஸன்னிதி4னி/ நில்வ/ ஸாகெ3னோ/
உனது/ சன்னிதானத்தினில்/ நிற்க/ முடிந்ததோ?/

நீ/ ஸேவ/ நில்வக3னு/-ஏலரா/
உனது/ சேவைகள்/ நிற்பது/ ஏனய்யா/

நீரஜ/-அக்ஷ/ த்யாக3ராஜ/ ஸன்னுத/ (ஸ்ரீ)
கமல/ கண்ணா/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - நில்வக3னேலரா - நில்வதே3லரா
Top

மேற்கோள்கள்

விளக்கம்
1 - நம்ரானன - தலைகுனிந்திருக்க - ஒருவர் தலை குனிவதர்க்கு பல காரணங்களிருக்கலாம் - நாணத்தினால், வெட்கத்தினால், வெறுப்பினால். சரணத்தினில், 'நான் செய்யும் தீய செயல்களெனும் தேவதை உனது சன்னிதானத்தினில் நிற்க முடிந்ததோ' என்று தியாகராஜர் கேட்கின்றார். இதனை இணைத்து நோக்குகையில், அப்படி ஒருவேளை, இறைவன் காண விரும்பாத ஒரு காட்சி (தீய செயல்கள் எனும் தேவதை) முன்னிற்பதனால்தான் இறைவன் தலை குனிந்து, நேரிடையாக நோக்க விரும்பவில்லையோ என தியாகராஜர் அஞ்சுகின்றார்.

Top


Updated on 22 Apr 2009

No comments: