Wednesday, March 4, 2009

தியாகராஜ கிருதி - முரிபெமு - ராகம் முகா2ரி - Muripemu - Raga Mukhaari

பல்லவி
முரிபெமு கலிகெ3 கதா3 ராம
ஸன்முனி நுத கரி வரத3 ஸ்ரீ ராம

அனுபல்லவி
பரம புருஷ ஜக3தீ31 வர ம்ரு2து3
பா4ஷ ஸு-கு3ண மணி கோஸ1 நீகு (மு)

சரணம்
சரணம் 1
ஈடு3 லேனி 1மலய மாருதமுசே
கூடி3ன காவேரீ தடமந்து3
மேட3ல மித்3தெ3லதோ ஸ்1ரு2ங்கா3ரமு
மிஞ்சு ஸத3னமுலலோ
வேடு3சு 2பூ4-ஸுருலக்3னி-ஹோத்ருலை
வேத3 கோ4ஷமுலசே நுதியிம்ப
ஜூட3 ஸி1வுடு3 கோரு யோக்3யமைன
ஸுந்த3ரமகு3 புரமு தொ3ரிகெனனுசு (மு)


சரணம் 2
ஸகல ஸு-க3ந்த4 ராஜ ஸுமமுலு
ஸ-லலிதமகு3 கோகில நாத3ம்முலு
ஸு1க முக2 3ஸனகாது3 நுதமைன
4ஸுர தருவுலு கலிகி3
நிகடமந்து3 வாணி கொலுவ ஸுர பதி
நீல மணி நிப41ரீர நேடு3
ப்ரகடமைன நவ-ரத்ன க2சித
ஹாடக மண்ட3ப வாஸமு கலிகெ3னனுசு (மு)


சரணம் 3
ஈ மஹிலோ ஸொக3ஸைன 5சோள
ஸீமயந்து3 வரமைன பஞ்ச நத3 புர
தா4முனி செந்தனு வஸிஞ்சுடகை
நீ மதி3னெஞ்சக3
காம ஜனக த்யாக3ராஜ ஸன்னுத
நாம பவன தனய வித்4ரு2த சரண
க்ஷேமமுக3 வர்தி4ல்லுனட்டி புரமுன ஸீதா
பா4ம ஸௌமித்ரி ப்ரக்க கொலிசெத3ரனி (மு)


பொருள் - சுருக்கம்
இராமா! உயர் முனிவரால் போற்றப் பெற்றோனே! கரிக்கருள்வோனே! பரம்பொருளே! அண்டமாள்வோனே! நல் மென்சொல்லோனே! நற்குண மணிப் பெட்டகமே! வானோர் தலைவா! நீல மணிக்கல் நிகருடலோனே! காமனையீன்றோனே! தியாகராசனால் போற்றப் பெற்ற நாமத்தோனே! வாயு மைந்தன் பற்றும் திருவடியோனே!

  • உனக்கு இறுமாப்புண்டானதன்றோ?

    • ஈடற்ற மலய மாருதத்துடன் கூடிய, காவேரி கரைதனில்,

    • மேடைகள், மெத்தைகளுடன், சிங்காரம் மிக்க வீடுகளில்,

    • வேண்டுதலுடன், அந்தணர் தீவளர்ப்போராகி, மறையோதலுடன் போற்றி செய்ய,

    • (அதனைக்) காண சிவனும் விழையத்தகு அழகிய நகரம் கிடைத்ததென்று, இறுமாப்புண்டானதன்றோ?


    • அனைத்து நறுமணமுடைய சிறந்த மலர்கள், மிக்கினிய குயிலினோசைகள், கிளி முகத்தோன், சனகாதியரால் போற்றப் பெற்ற வானோர் தருக்கள் ஏற்பட்டு,

    • அருகில் வாணி சேவிக்க,

    • இன்று வெளியரங்கில், நவரத்தினங்கள் இழைக்கப்பெற்ற பொன் மண்டப வாசம் ஏற்பட்டதென்று, இறுமாப்புண்டானதன்றோ?


    • இப்புவியில், சொகுசான சோழச் சீமையினில், சீர்மிகுத் திருவையாறு நகர் உறைவோனின் அருகில் வசிப்பதற்கு உனது மனத்திலெண்ண,

    • வசதியாக, செழிக்கும், அத்தகைய நகரத்தினில்,

    • சீதைப்பெண்ணாள், இலக்குவன் பக்கத்தில் சேவிக்கின்றனரென, இறுமாப்புண்டானதன்றோ?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
முரிபெமு/ கலிகெ3/ கதா3/ ராம/
இறுமாப்பு/ உண்டானது/ அன்றோ/ இராமா/

ஸன்/-முனி/ நுத/ கரி/ வரத3/ ஸ்ரீ ராம/
உயர்/ முனிவரால்/ போற்றப் பெற்றோனே/ கரிக்கு/ அருள்வோனே/ ஸ்ரீ ராமா/


அனுபல்லவி
பரம புருஷ/ ஜக3த்/-ஈஸ1/ வர/ ம்ரு2து3/
பரம்பொருளே/ அண்டம்/ ஆள்வோனே/ நல்/ மென்/

பா4ஷ/ ஸு-கு3ண/ மணி/ கோஸ1/ நீகு/ (மு)
சொல்லோனே/ நற்குண/ மணி/ பெட்டகமே/ உனக்கு/ இறுமாப்பு...


சரணம்
சரணம் 1
ஈடு3/ லேனி/ மலய/ மாருதமுசே/
ஈடு/ அற்ற/ மலய/ மாருதத்துடன்/

கூடி3ன/ காவேரீ/ தடமு-அந்து3/
கூடிய/ காவேரி/ கரைதனில்/

மேட3ல/ மித்3தெ3லதோ/ ஸ்1ரு2ங்கா3ரமு/
மேடைகள்/ மெத்தைகளுடன்/ சிங்காரம்/

மிஞ்சு/ ஸத3னமுலலோ/
மிக்க/ வீடுகளில்/

வேடு3சு/ பூ4-ஸுருலு/-அக்3னி-ஹோத்ருலை/
வேண்டுதலுடன்/ அந்தணர்/ தீவளர்ப்போராகி/

வேத3/ கோ4ஷமுலசே/ நுதியிம்ப/
மறை/ ஓதலுடன்/ போற்றி செய்ய/

ஜூட3/ ஸி1வுடு3/ கோரு/ யோக்3யமைன/
காண/ சிவனும்/ விழைய/ தகு/

ஸுந்த3ரமகு3/ புரமு/ தொ3ரிகெனு/-அனுசு/ (மு)
அழகிய/ நகரம்/ கிடைத்தது/ என்று/ இறுமாப்பு...


சரணம் 2
ஸகல/ ஸு-க3ந்த4/ ராஜ/ ஸுமமுலு/
அனைத்து/ நறுமணமுடைய/ சிறந்த/ மலர்கள்/

ஸ-லலிதமகு3/ கோகில/ நாத3ம்முலு/
மிக்கினிய/ குயிலின்/ ஓசைகள்/

ஸு1க/ முக2/ ஸனக-ஆது3ல/ நுதமைன/
கிளி/ முகத்தோன்/ சனகாதியரால்/ போற்றப் பெற்ற/

ஸுர/ தருவுலு/ கலிகி3/
வானோர்/ தருக்கள்/ ஏற்பட்டு/

நிகடமு-அந்து3/ வாணி/ கொலுவ/ ஸுர/ பதி/
அருகில்/ வாணி/ சேவிக்க/ வானோர்/ தலைவா/

நீல/ மணி/ நிப4/ ஸ1ரீர/ நேடு3/
நீல/ மணிக்கல்/ நிகர்/ உடலோனே/ இன்று/

ப்ரகடமைன/ நவ-ரத்ன/ க2சித/
வெளியரங்கில்/ நவரத்தினங்கள்/ இழைக்கப்பெற்ற/

ஹாடக/ மண்ட3ப/ வாஸமு/ கலிகெ3னு/-அனுசு/ (மு)
பொன்/ மண்டப/ வாசம்/ ஏற்பட்டது/ என்று/ இறுமாப்பு...


சரணம் 3
ஈ/ மஹிலோ/ ஸொக3ஸைன/ சோள/
இந்த/ புவியில்/ சொகுசான/ சோழ/

ஸீம-அந்து3/ வரமைன/ பஞ்ச நத3/ புர/
சீமையினில்/ சீர்மிகு/ திருவையாறு/ நகர்/

தா4முனி/ செந்தனு/ வஸிஞ்சுடகை/
உறைவோனின்/ அருகில்/ வசிப்பதற்கு/

நீ/ மதி3னி/-எஞ்சக3/
உனது/ மனத்தில்/ எண்ண/

காம/ ஜனக/ த்யாக3ராஜ/ ஸன்னுத/
காமனை/ யீன்றோனே/ தியாகராசனால்/ போற்றப் பெற்ற/

நாம/ பவன/ தனய/ வித்4ரு2த/ சரண/
நாமத்தோனே/ வாயு/ மைந்தன்/ பற்றும்/ திருவடியோனே/

க்ஷேமமுக3/ வர்தி4ல்லு/-அட்டி/ புரமுன/ ஸீதா/
வசதியாக/ செழிக்கும்/ அத்தகைய/ நகரத்தினில்/ சீதை/

பா4ம/ ஸௌமித்ரி/ ப்ரக்க/ கொலிசெத3ரு/-அனி/ (மு)
பெண்ணாள்/ இலக்குவன்/ பக்கத்தில்/ சேவிக்கின்றனர்/ என/ இறுமாப்பு...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
2- அக்3னி-ஹோத்ருலு - தீவளர்ப்போர் - அந்தணர்கள் தினசரி காலை சூரியன் உதிப்பதற்கு முன்பும், மாலையில் சூரியன் மறைந்த பின்பும் இயற்றும் வேள்வி. அங்கனம் தவறாது வேள்வி இயற்றுவோருக்கு 'அக்3னி-ஹோத்ரி' என்று பெயர் (பட்டம்) அக்3னி-ஹோத்ரி

Top

விளக்கம்
1 - மலய மாருதமு - சந்தன மரங்கள் நிறைந்த மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியிலிருந்து வீசும் தென்றல்.

3 - ஸனகாது3 - சனர், சனகர், சனந்தனர், சனாதனர் ஆகிய பிரமனின் நான்கு மைந்தர்கள். இவரில், சனர் எனப்படும் சனத்குமாரர் 'முருகன்' என்று அழைக்கப்படுவார்.

4 - ஸுர தருவுலு - மந்தாரம், பாரிஜாதம், சந்தானம், கற்ப தரு, ஹரி சந்தனம் ஆகிய விரும்பியதை அளிக்கும் ஐந்து வானோர் தருக்கள்.

5 - சோள - இன்றைய தஞ்சாவூரைத் தலை நகராகக் கொண்ட சோழ நாடு.

இறுமாப்பு - முறைப்பு என்றும் கொள்ளலாம்
மேடை - உப்பரிகை
மெத்தை - மேல் வீடு
கிளி முகத்தோன் - சுக முனி
திருவையாறு நகருறைவோன் - சிவன்

Top


Updated on 04 Mar 2009

No comments: