Wednesday, March 4, 2009

தியாகராஜ கிருதி - ஏலாவதார - ராகம் முகா2ரி - Elaavataara - Raga Mukhaari

பல்லவி
ஏலாவதாரமெத்துகொண்டிவி
ஏமி காரணமு ராமுடை3

அனுபல்லவி
ஆலமு ஸேயுடகா அயோத்4
பாலன ஸேயுடகா ஓ ராக4வ (ஏ)

சரணம்
1யோகு3லு 2ஜூசுடந்து3கா4
ரோகு33ப்3ரோசுடந்து3கா1
ராக3 ரத்ன மாலிகலு ரசிஞ்சின த்யாக3-
ராஜுகு 4வரமொஸகு3டந்து3கா (ஏ)


பொருள் - சுருக்கம்
ஓ இராகவா!
    ஏன் அவதரித்தாயோ? என்ன காரணமோ, இராமனாக?
  • போர் புரிவதற்கோ?

  • அயோத்தியை ஆள்வதற்கோ?

  • யோகியர் (உன்னைக்) காண்பதற்கென்றோ?

  • பிறவிப் பிணியாளிகளைக் காப்பதற்கென்றோ?

  • நூற்றுக் கணக்கான ராக இரத்தின மாலைகளைப் புனைந்த தியாகராசனுக்கு வரமருள்வதற்கென்றோ?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஏல/-அவதாரமு-எத்துகொண்டிவி/
ஏன்/ அவதரித்தாயோ/

ஏமி/ காரணமு/ ராமுடை3/
என்ன/ காரணமோ/ இராமனாக/


அனுபல்லவி
ஆலமு/ ஸேயுடகா/ அயோத்4ய/
போர்/ புரிவதற்கோ/ அயோத்தியை/

பாலன ஸேயுடகா/ ஓ ராக4வ/ (ஏ)
ஆள்வதற்கோ/ ஓ இராகவா/


சரணம்
யோகு3லு/ ஜூசுடந்து3கா/ ப4வ/
யோகியர்/ (உன்னைக்) காண்பதற்கென்றோ/ பிறவி/

ரோகு3ல/ ப்3ரோசுடந்து3கா/ ஸ1த/
பிணியாளிகளை/ காப்பதற்கென்றோ/ நூற்றுக் கணக்கான/

ராக3/ ரத்ன/ மாலிகலு/ ரசிஞ்சின/
ராக/ இரத்தின/ மாலைகளை/ புனைந்த/

த்யாக3ராஜுகு/ வரமு/-ஒஸகு3டந்து3கா/ (ஏ)
தியாகராசனுக்கு/ வரம்/ அருள்வதற்கென்றோ/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
சில புத்தகங்களில் மாற்று ராகத்தின் பெயர் 'சாலக பை4ரவி' என்று கொடுக்கப்பட்டுள்ளது.

1 - யோகு3லு ஜூசுடந்து3கா - யோகு3லனு ஜூசுடந்து3கா : 'யோகு3லு ஜூசுடந்து3கா' என்றால் 'யோகியர் உன்னைக் காண்பதெற்கென்றோ' என்று பொருள். 'யோகு3லனு ஜூசுடந்து3கா' என்றால் 'யோகியரை நீ காண்பதற்கென்றோ' என்று பொருள்.

ராமாயாணத்தின்படி, காட்டில் வாழும் முனிவர்களும், யோகியரும் அரக்கர்களின் தொல்லைகளைத் தாளவியலாது, அவர்களை அடக்குவதற்காக, ராமனுடை வரவை எதிர்நோக்கியிருந்தனர். யோகியரை அரக்கரிடமிருந்து காத்தல்தான் ராமனின் அவதாரத்திற்குக் காரணம். எனவே, 'யோகு3லு ஜூசுடந்து3கா' இவ்விடம் பொருந்தும்.

தியாகராஜரின் 'முத்3து3 மோமு' எனும் சூர்யகாந்த ராகப் பாடலில், 'முனிவர்கள், எழிலான உனது முகத்தினைக் கண்டு, எங்ஙனம் மோகித்தனரோ' என்று வியக்கின்றார்.

2 - ஜூசுடந்து3கா - ஜூசுடகா

3 - ப்3ரோசுடந்து3கா - ப்3ரோசுடகா

4 - வரமொஸகு3டந்து3கா - வரமொஸகு3டகா

Top

மேற்கோள்கள்

விளக்கம்



Updated on 01 Mar 2009

No comments: