Saturday, September 27, 2008

உபசாரமு ஜேஸேவாரு - பைரவி ராகம் - Upacharamu Jesevaru - Raga Bhairavi

பல்லவி
உபசாரமு ஜேஸேவாருன்னாரனி மரவகுரா

அனுபல்லவி
க்ரு2ப காவலெனனி நே நீ
கீர்தினி பல்குசுனுண்ட33 (உ)

சரணம்
வாகிடனே 1பதிலமுகா3 வாதாத்மஜுடு3ன்னாட3னி
2ஸ்ரீ-கருலகு3 நீ தம்முலு சேரியுன்னாரனி
ஏகாந்தமுனனு 3ஜானகியேர்படி3யுன்னத3னி
ஸ்ரீ காந்த பருலேலனி ஸ்ரீ த்யாக3ராஜ வினுத



பொருள் - சுருக்கம்
இலக்குமி மணாளா! தியாகராஜனால் போற்றப்பெற்றோனே!

உபசரிப்போ ருளரென (என்னை) மறந்துவிடாதே!

அருளினைக் கோரி, நான் உனது
புகழினைப் பாடிக்கொண்டிருக்க,
உபசரிப்போர் உளரென (என்னை) மறந்துவிடாதே!

வாயிலில், விழிப்புடன் வாயு மைந்தனுள்ளான் என்றோ,
நற்பணி புரிவோராக, உனது பின்னோர் சேர்ந்துள்ளனர் என்றோ,
தனிமையில், ஜானகி அமையப் பெற்றுள்ளனள் என்றோ,
பிறர் எதற்கென, என்னை மறந்துவிடாதே!



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
உபசாரமு-ஜேஸேவாரு/ உன்னாரு-அனி/ மரவகுரா/
உபசரிப்போர்/ உளரென/ மறந்துவிடாதே/



அனுபல்லவி
க்ரு2ப/ காவலெனு/ அனி/ நே/ நீ/
அருள்/ வேணடும்/ என/ நான்/ உனது/

கீர்தினி/ பல்குசுனு-உண்ட33/
புகழினை/ பாடிக்கொண்டிருக்க/
உபசரிப்போர் உளரென மறந்துவிடாதே!



சரணம்
வாகிடனே/ பதிலமுகா3/ வாத/ ஆத்மஜுடு3/ உன்னாடு3/ அனி/
வாயிலில்/ விழிப்புடன்/ வாயு/ மைந்தன்/ உள்ளான்/ என்றோ/

ஸ்ரீ-கருலகு3/ நீ/ தம்முலு/ சேரி/ உன்னாரு/ அனி/
நற்பணி புரிவோராக/ உனது/ பின்னோர்/ சேர்ந்து/ உள்ளனர்/ என்றோ/

ஏகாந்தமுனனு/ ஜானகி/ ஏர்படி3 உன்னதி3/ அனி/
தனிமையில்/ சானகி/ அமையப் பெற்றுள்ளனள்/ என்றோ/

ஸ்ரீ/ காந்த/ பருலு/ ஏல/ அனி/ ஸ்ரீ த்யாக3ராஜ/ வினுத/
இலக்குமி/ மணாளா/ பிறர்/ எதற்கு/ என/ தியாகராசனால்/ போற்றப்பெற்றோனே/
என்னை மறந்துவிடாதே!

குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

1பதிலமுகா3 - பதிலமுக3

3ஜானகியேர்படி3யுன்னத3னி - ஜானகியேர்படி3யுன்னார3னி

மேற்கோள்கள்


விளக்கம்
2ஸ்ரீ-கருலகு3 - 'ஸ்ரீ கார்யம்' எனபது புனித பணிகளைக் குறிக்கும்

உபசரித்தல் - சேவை செய்தல்
Top


No comments: