Thursday, January 27, 2011

தியாகராஜ கிருதி - ஸுதா4 மாது4ர்ய - ராகம் ஸிந்து4 ராமக்ரிய - Sudha Madhurya - Raga Sindhu Ramakriya

பல்லவி
ஸுதா4 மாது4ர்ய பா4ஷண ஸுதா4கரானன

அனுபல்லவி
1கதா2ம்ரு2தமு சே3ஹு காலமு
2ஆகலி தீரியுன்னானு ப்3ரோவுமு (ஸு)

சரணம்
3து3ராத்முலகு3 பூ4-கிராதகுல
சேர ராத3னுசு ஸுந்த3ராகார நீ
பராயணுல செலிமி ரா கோரு த்யாக3-
ராஜ நுத ஓ பராத்பர ஸுகு3ண (ஸு)


பொருள் - சுருக்கம்
  • அமிழ்தினியச் சொல்லோனே! தண்மதி முகத்தோனே!
  • எழிலுருவே! தியாகராசன் போற்றும், ஓ பராபரமே! நற்குணத்தோனே!

    • பல காலம், (உனது) சரிதை (எனும்) அமிழ்துண்டு, பசியாறியுள்ளேன்;
    • தீய உள்ளத்தோராகிய, புவியின் இழிந்தோரைச் சேரலாகாதென, உனது தொண்டு பூண்டோரின் இணக்கம் பெறக் கோருகின்றேன்.
    • (என்னைக்) காவுமய்யா.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸுதா4/ மாது4ர்ய/ பா4ஷண/ ஸுதா4-கர/-ஆனன/
அமிழ்து/ இனிய/ சொல்லோனே/ தண்மதி/ முகத்தோனே/


அனுபல்லவி
கதா2/-அம்ரு2தமு/ சே/ ப3ஹு/ காலமு/
(உனது) சரிதை/ (எனும்) அமிழ்து/ உண்டு/ பல/ காலம்/

ஆகலி/ தீரி/-உன்னானு/ ப்3ரோவுமு/ (ஸு)
பசி/ யாறி/ யுள்ளேன்/ (என்னைக்) காவுமய்யா/


சரணம்
து3ராத்முலகு3/ பூ4/-கிராதகுல/
தீய உள்ளத்தோராகிய/ புவியின்/ இழிந்தோரை/

சேர ராது3/-அனுசு/ ஸுந்த3ர/-ஆகார/ நீ/
சேரலாகாது/ என/ எழில்/ உருவே/ உனது/

பராயணுல/ செலிமி/ ரா/ கோரு/
தொண்டு பூண்டோரின்/ இணக்கம்/ பெற/ கோரும்/

த்யாக3ராஜ/ நுத/ ஓ பராத்பர/ ஸுகு3ண/ (ஸு)
தியாகராசன்/ போற்றும்/ ஓ பராபரமே/ நற்குணத்தோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3 - து3ராத்முலகு3 - து3ராத்முலகு : இவ்விடத்தில் 'து3ராத்முலு' என்பது, அடுத்து வரும், 'கிராதகுல' என்பதன் அடைமொழியாகும். எனவே, 'து3ராத்முலகு3' (தீய உள்ளத்தோராகிய) என்பதே பொருந்தும். 'து3ராத்முலகு' (தீய உள்ளத்தோருக்கு) என்று கொண்டால், சரணத்திற்கு சரிவரப் பொருள் கொள்ள இயலாது.

Top

மேற்கோள்கள்
1 - கதா2ம்ரு2தமு சே - உனது கதையெனும் அமிழ்துண்டு. தியாகராஜர், துருவன், இறைவனிடம் கூறியதனை (பாகவத புராணம், 4-வது புத்தகம், 11-வது செய்யுள்) எதிரொலிக்கின்றார் -

"உனது கதையெனும், அமுது பருகிய உன்மத்தனாகி, இந்தக் கொடிய, துயரம் நிறை, பிறவிக்கடலினை நான் கடப்பதற்கு, அளவிடற்கரியோனே!
உனது பக்தி இடையறாது செய்யும், உள்ளத் தூய்மை உடைய, பெரியோர்களின் நல்லிணக்கம், எனக்கு உண்டாவதாக."

2 - ஆகலி தீரியுன்னானு - பசியாறியுள்ளேன். கீழ்க்கண்ட திருக்குறள் செய்யுள் நோக்குக -

செவிக்கு உணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப்படும் (412)

Top

விளக்கம்



Updated on 27 Jan 2011

2 comments:

  1. திரு கோவிந்தன் அவர்களே

    சரணத்தில் செலிமி ரா கோரு
    என்பதில் கோரு என்பதற்கு ’கோரும்’ என்பது தானே பொருள். பதவுரையில் சரியாகக் ’கோரும்’ என்று பொருள் கொடுத்துள்ளீர். ஆனால் பொருள் சுருக்கத்தில் ’கோருகின்றேன்’ என்று கொடுத்துள்ளீர்.
    வணக்கம்
    கோவிந்தசாமி

    ReplyDelete
  2. திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,

    தியாகராஜரின் பல கிருதிகளில், மிக நீளமான வாக்கியங்களைக் குறுக்க வேண்டியதாகின்றது. அதனால் சில இடங்களில் நான், இம்முறையைக் கையாண்டுள்ளேன். இதனால் பொருள் ஏதும் மாறாததால், தவறில்லை என்று கருதி அங்ஙனம் செய்துள்ளேன்.

    வணக்கம்,
    கோவிந்தன்.

    ReplyDelete